Saturday, 26 December 2009

இயக்குனர் ஆகிறார் கவுதமி! பாலசந்தர் நடிக்கும் கமல் படம்


தன்னை ஹீரோவாக்கிய பாலசந்தரை, ஹீரோவாக்க வேண்டும் என்பதுதான் கமலின் நெடுநாளைய கனவு. இதற்காக அவரே ஒரு ஸ்கிரிப்ட் தயாரித்து வைத்திருந்தார். ஆனால் நடிப்பதில் விருப்பம் இல்லாத பாலசந்தர், விலகி விலகி போக கடைசியில் அவரை வேறு சில இயக்குனர்கள் இயக்க ஆரம்பித்தார்கள். ரெட்ட சுழி, முறியடி என்று நடிகராகவும் தனது பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் சிகரம்.

இந்த நேரத்தில் தனது ஸ்கிரிப்டை பாலசந்தருக்கு நினைவூட்டிய கமல், ஹீரோவாக நடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த, சம்மதித்துவிட்டதாம் சிங்கம். ஸ்கிரிப்ட் மட்டும்தான் கமல். இயக்கம் கவுதமி என்று முடிவாகியிருக்கிறது. நடிப்பை தாண்டியும் பல்வேறு துறைகளில் பளிச்சிடும் கவுதமி, தனது இயக்குனராகும் லட்சியத்தை இதன் மூலம் அடைந்திருக்கிறார். பாலசந்தருடன் மாதவனும் நடிக்கிறாராம். ஸ்ருதி கமல் இசையமைக்கிறார்.

கவுதமி, ஸ்ருதி என்று கமலும் மினி ராஜேந்தர் ஆகிவிட்டாரோ என்று ஐயுற வைத்தாலும், ஸ்ருதி சுத்தமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமே தரலாம். இதெல்லாம் எப்போது நடக்குமாம்? கேஎஸ்.ரவிகுமார் படத்தையடுத்து இந்த படத்தை துவங்கவிருக்கிறார்களாம். மர்மயோகியை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார் கமல். அதுபற்றிய விபரங்கள் விரைவில்...

No comments:

Post a Comment